சாய் ராம்
- nrsmanian123
- May 28, 2020
- 1 min read
சின்னஞ்சிறு சிறுவனாக…
கந்தலாடை நீ… உடுத்தி….
சீரடி வீதியிலே…
சுற்றி சுற்றி நீ… திரிந்தாய்…… (2)
உன்னுடைய கருணைதனை
அளந்திட முடியாது….
உன்னைப்போல் ஒரு தெய்வம்
உலகினில் கிடையாது….. (சின்ன)..
உன்னை நானும் கண்டேன்
உண்மையை உணர்ந்தேன்…
உன்னடி பணிந்தேன்…
உள்ளத்தால் தெளிந்தேன்… (சின்ன)
கஃபினியை மடித்து…
உதி ஒன்று கொடுத்தாய்….
உண்மையாய் அருந்த
நோய் நொடி தீர்த்தாய்….. (சின்ன)
Comments